T20 உலகக் கோப்பைக்கான தூதராக உசைன் போல்ட் நியமனம்
ஜூன் 1 முதல் 29, 2024 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் இருபது20 உலகக் கோப்பைக்கான பிராண்ட் தூதராக ஒலிம்பியன் உசைன் போல்ட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. புதிய தலைமுறை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது சிறப்பு. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் 100மீ, 200மீ மற்றும் 4×100மீ உலக சாதனை படைத்திருந்தார். […]













