செய்தி

காசாவில் பட்டினியால் மக்களை கொல்லும் இஸ்ரேல்: ஐ.நா எச்சரிக்கை

காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களில் பசியை ஒரு “ஆயுதமாக” பயன்படுத்துகிறது என்று உணவு உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அனடோலுவிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அனைத்து பாலஸ்தீனியர்களையும் தண்டிக்க விரும்புவதாகவும், இது ஒரு “இனப்படுகொலை” என்றும் கூறிய மைக்கேல் ஃபக்ரி, காசா இந்த அளவு பசியை அனுபவித்ததில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் காஸாவில் வாழ்வதாகவும் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுப்பு!

  • February 22, 2024
  • 0 Comments

வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சில இடங்களில் உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை

யாழில் கரை ஒதுங்கிய மர்மக் கூடாரம்!

  • February 22, 2024
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று (22.02)  கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர். இரும்பால் ஆன குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவர முயன்ற நிலையில், அவ் முயற்சி தோல்வியுற்றதால்,  கூடாரத்தை அகற்றும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டிருந்தது. […]

ஆசியா

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான நிலநடுக்கம்

  • February 22, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமெனெப் பகுதியில் புதன்கிழமை இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று இரவு 10.46 மணியளவில் இந்தோனேசியாவின் சுமெனெப் பகுதியிலிருந்து தெற்கே 88 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 598.7 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை

மர்மமான முறையில் இறந்து கிடந்த நபரொருவர்..!

  • February 22, 2024
  • 0 Comments

தனது மகன் தன்னை தடியால் தாக்கியதாக தொம்பே பொலிஸில் நபர் ஒருவர் நேற்று (21) முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி, அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான சட்ட வைத்தியப் படிவத்தை பொலிஸார் வழங்கியுள்ள போதும் அவர் வைத்தியசாலையில் அனுமதியாகவில்லை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதன்படி நேற்று பிற்பகல் தொம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிதர சந்திக்கு அருகில் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் வீழ்ந்து கிடப்பதாக தொம்பே பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்ததுடன், அவர் மேதவரனிய, […]

இலங்கை

முக்கிய பதவிகளை எதிர்கட்சியினருக்கு வழங்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை!

  • February 22, 2024
  • 0 Comments

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் எம்.பி லக்ஷ்மன் கிரியெல்ல பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் இன்றைய (22.02) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  போராட்டத்தின் போது சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவிகளை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பான நிலைமையை சபாநாயகர் மஹிந்த யாப்பா […]

ஐரோப்பா

அவ்திவ்கா நகரை கைப்பற்றியதை தொடர்ந்து கிராமங்களில் ஊடுருவும் ரஷ்ய படையினர்!

  • February 22, 2024
  • 0 Comments

ரஷ்ய படையினர் அவ்திவ்கா நகரை கைப்பற்றிய பின்னர் மேலும் கிராமங்களுக்கு முன்னேறிவருதாக உக்ரைனிய வீரர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள 47 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட படையணியின் உக்ரேனிய ட்ரோன் விமானி ரஷ்ய வீரர்களின் செயற்பாடு அவ்திவ்காவை கைப்பற்றுவதுடன் மட்டும் முடிந்துவிடாதுஇ அவர்கள் தொடர்ந்து தாக்குகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். இதன்படி ரஷ்ய படைகள் லாஸ்டோச்கைன் கிராமத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும்இ தற்போது படைகளை சேகரிப்பதற்காக சிறியை இடைவெளியை அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். […]

ஐரோப்பா

ரஷ்யாவால் ஆக்கிரிமிக்கப்பட்ட உக்ரைனின் பயிற்சி நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் : 60 பேர் உயிரிழப்பு!

  • February 22, 2024
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் உள்ள பயிற்சி நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டு ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 60 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தளபதியின் வருகைக்காக டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள தளத்தில் படையினர் கூடியிருந்தவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிர் பிழைத்த இராணுவ வீரர் ஒருவர், படையணியின் […]

உலகம்

ஆப்கானிஸ்தானில் தொல்பொருள் மதிப்புள்ள பகுதிகள் அழிப்பு!

  • February 22, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் தொல்பொருள் மதிப்புள்ள பகுதிகள் பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி முறையாக அழிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. பழங்கால பெறுமதி மிக்க பொருட்களை தேடி அழிக்கப்பட்ட இடங்களில் சிலர் அகழ்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2021ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்களும், முந்தைய அரசும் முழு ஆதரவுடன் அழிவுகளை மேற்கொண்டு வருவது செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கிமு 1,000 க்கு முன்னர் காலனித்துவப்படுத்தப்பட்ட பல தொல்பொருள் மதிப்புமிக்க தளங்கள் […]

தென் அமெரிக்கா

வெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் பலி!

  • February 22, 2024
  • 0 Comments

வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோத தங்க சுரங்கம் அமைத்துள்ளது. அந்த திறந்தவெளி தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு பாதி திடீரென இடித்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பல தொழிலாளிகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினார் தொழிலாளிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தங்க சுரங்கம் […]

error: Content is protected !!