ஐரோப்பா

இஷா புயல்: பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

128km வேகத்தில் காற்று வீசுவதுடன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் புதிய புயல் பின்னர் இங்கிலாந்தைத் தாக்க உள்ளது என அறிவிக்கபப்ட்டுள்ளது. இஷா புயல் இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பெரும்பகுதிகளில் காற்றுக்கான அம்பர் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து. பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் இங்கிலாந்தைத் தாக்கும் புயல்களில் ஒன்பதாவது பெயர் ஈஷா ஆகும். புயலின் வலுவான காற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள் காலை வரை எதிர்பார்க்கப்படுகிறது, […]

இலங்கை

வவுனியாவில் யுவதி மீது தாக்குதல் : இரு பெண்கள் கைது!

  • January 21, 2024
  • 0 Comments

வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரு பெண்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (20.01) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்க்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப்பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையிலேயே குறித்த யுவதி மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வடிகாலமைப்பு சீரற்ற […]

இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் : வெளியான தகவல்!

  • January 21, 2024
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு உத்திகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் கூறுகின்றன. புதிய பாதுகாப்பு யுக்திகளுக்கு, முன்னாள் பாதுகாப்பு படையினர் பல உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், புதிய முறைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை அண்மைய பாதுகாப்பு யுக்திகளை அக்கட்சி கையாண்ட போதிலும் அதையும் தாண்டிய புதிய வழிமுறைகள் தேவை […]

இலங்கை

இலங்கையில் பெரும்பாலான தொழிலாளர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்!

  • January 21, 2024
  • 0 Comments

இந்த நாட்டில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தற்போது போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் சமூகத்தை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். சமூக பொலிஸ் ஸ்தாபனத்தின் ஐந்தாம் கட்டமாக கொழும்பு மத்திய பிரிவின் சமூக பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் வைபவம் நேற்று (20) மாளிகாவத்தை பி.டி.சிறிசேன விளையாட்டரங்கில் இடம்பெற்றது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் […]

இலங்கை

இலங்கை – பாணந்துறை கடற்பகுதியில் நீராடச்சென்ற போலந்து பிரஜை உயிரிழப்பு!

  • January 21, 2024
  • 0 Comments

பாணந்துறை கடற் பகுதியில்  நீராடச் சென்ற போலந்து நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 61 வயதுடைய போலந்து நாட்டு பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர், உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு […]

பொழுதுபோக்கு

பூர்ணிமாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. குவியும் பட வாய்ப்புகள்

  • January 21, 2024
  • 0 Comments

நடந்து முடிந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னர் என தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை மணி பிடிக்க மூன்றாவது இடத்தை மாயா மற்றும் நான்கு, ஐந்து இடங்களில் விஷ்ணு, தினேஷ் பிடித்தனர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறினார். ரூ. 1 லட்சத்தில் இருந்து துவங்கிய இந்த சுற்று இறுதியாக ரூ. 16 லட்சம் வந்தது. இதன்பின் தொகை அதிகரிக்கவும் செய்யும், குறையவும் செய்யும் […]

இலங்கை

தமிழரசு கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு!

  • January 21, 2024
  • 0 Comments

தமிழரசு கட்சியின் தலைமையை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று (21.01) இடம்பெற்ற நிலையில், குறித்த தேர்தலில் சிறிதரன் வெற்றிப்பெற்றுள்ளார். இன்று காலை (21.01) 10.00 வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வாக்களிப்பில் 296 உறுப்பினர்களே கலந்துகொண்டதாகவும், அவர்களில் மட்டகளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் தேர்தலை புறக்கனித்ததாகவும் அறிய முடிகிறது. இந்நிலையில், 184 வாக்குகளை பெற்று சிவஞானம் சிறிதரன் வெற்றிப்பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன் 134 […]

இலங்கை

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் பலியான சிறுவன் !

  • January 21, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு 10 வயது சிறுவன், நேற்று (20) மாலை உயிரிழந்துள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கயிறு சிக்கியே குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த குழந்தை பிரசாந்த் தனோஷ் என்று தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை உடனடியாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் நடைபெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கடும் பொழிவு காரணமாக 61 பேர் உயிரிழப்பு..!

  • January 21, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசி வருகிறது. பனிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆசியா

இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்; பீதியில் மக்கள்

  • January 21, 2024
  • 0 Comments

இந்திய பெருங்கடல் பகுதியில் 6.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 1ம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, ஏராளமான கட்டிடங்களும் இடிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பாக தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் […]

error: Content is protected !!