பீஜி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
தெற்கு பசிபிக் சமுத்திர தீவு கூட்டங்களில் ஒன்றான பீஜி தீவுக் கூட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (31.10) பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு போன்ற உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இதேபோன்ற அளவிலான நிலநடுக்கம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிஜியில் ஏற்பட்டது.












