கொக்குத்தொடுவாய் மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதில் சிக்கல்!
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இருந்து மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எலும்புக்கூடுகள் ஒன்றின் மீது ஒன்றாக குவிந்து காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகிறது என்பதை இனங்காணமுடியவில்லை என அகழ்வாராய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொக்குத் தொடுவாய் பகுதியில் இன்று (11.09) ஐந்தாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இன்றைய அகழ்வுப் […]













