பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்றவருக்கு நேர்ந்த கதி!
திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று (22) பதிவாகியுள்ளது. திருகோணமலை- திருஞானசம்பந்தர் வீதியில் வசித்து வந்த கனகரத்னம் சிவக்குமார் (53வயது) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சாம்பல்தீவு கடற்கரைக்கு ஆறு பேர் கொண்ட குழு சென்றதாகவும் அதில் மூவர் குளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் இதனையடுத்து பொலிஸார் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் குறித்த நபரை […]













