17.85 மில்லியன் மீட்பு – விசாரணை வலையில் சிக்கப்போகும் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 27ஆம் திகதி அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலேயே வாக்குமூலம் பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைப்பொன்று மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து மீட்கப்பட்ட பணம் இலஞ்சம் தொடர்பான குற்றங்களுக்குள் அடங்ககூடியதாக என்பது குறித்து விளக்கமளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை […]













