பொழுதுபோக்கு

நம்பி இந்த ஒருவரால் ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!! என்ன நடந்தது?

  • June 19, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரை பேமஸ் ஆக்கியது தெலுங்கு படங்கள் தான். தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் ராஷ்மிகாவுக்கு நேஷனல் கிரஷ் என்கிற பட்டத்தையும் பெற்றுத்தந்தது. அந்த அளவுக்கு இளம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் ராஷ்மிகா. நடிகை ராஷ்மிகா நடிப்பில் தற்போது அனிமல் என்கிற இந்தி படம் தயாராகி வருகிறது. இதில் […]

இலங்கை

ஜூன் 29 இல் புனித ஹஜ் பெருநாள்! கொழும்பு பெரிய பள்ளிவாசல்

நாட்டில் துல் ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. புனித துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை  தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

ஐரோப்பா

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள சிபிலிஸ் நோய்

  • June 19, 2023
  • 0 Comments

ஒரு காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் மட்டுமே காணப்பட்டதாக கருதப்படும் மோசமான நோய் ஒன்று இங்கிலாந்தில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இரண்டு உலகப்போர்களுக்குப் பின் அதிகரிக்கத் துவங்கிய நோய் சிபிலிஸ் என்னும் பாலுறவு மூலம் பரவும் நோய். பெனிசிலின் என்னும் விலைமதிப்பில்லாத ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், ஆணுறைகள் பயன்பாட்டைத் தொடர்ந்தும் குறையத் தொடங்கியது இந்நோய். தற்போது இங்கிலாந்தில் இந்த சிபிலிஸ் நோய் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில், 15 சதவிகிதம் அதிகரித்து 8,700 பேருக்கு இந்நோய் தொற்றியுள்ளது தெரியவந்துள்ளது. […]

உலகம்

ரஷ்யாவிற்கு, சீனா ஆயுத உதவிகளை வழங்காது என்பதை மீளுறுதி செய்துள்ளது!

  • June 19, 2023
  • 0 Comments

உக்ரைனில் போரிட ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்ற வாக்குறுதியை சீனா புதுப்பித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று (19) சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இருப்பினும், சீன நிறுவனங்கள்  உக்ரைனில் அதன் ஆக்கிரமிப்பை முன்னெடுப்பதற்கு ரஷ்யா பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை வழங்குவது பற்றி எங்களுக்கு தொடர்ந்து கவலைகள் உள்ளன என்றும் பிளிங்கன் கூறினார். இதுகுறித்து சீன அரசு மிகுந்த விழிப்புடன் […]

ஐரோப்பா

ஜேர்மனியில் கிடைத்த 2ம் உலகப்போர்க்கால வெடிகுண்டு; 8,100 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

  • June 19, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போர்க்கால குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 8,100 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மனியின் ஹானோவர் நகரில் இரண்டாம் உலகப்போர்க்கால பிரித்தானிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.அதை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக ஹானோவர் நகரில் வாழ்ந்த சுமார் 8,100 பேர், தங்களுக்குத் தேவையான மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டார்கள். அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, […]

செய்தி

இந்திய அரசின் உளவு அமைப்பான RAW -வின் புதிய தலைவராக ரவி சின்ஹா ஐ.பி.எஸ். நியமனம்

இந்தியாவின் முதன்மையாக உளவு மற்றும் கொள்கை வகுப்பு அமைப்பான Research and Analysis Wing ரா-வின் புதிய தலைவராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் முதன்மை உளவு அமைப்புகள் ஐபி மற்றும் ரா. ரா அமைப்பானது உளவு மற்றும் கொள்கை வகுப்பு விவகாரங்களில் முதனமையானது. இதன் தற்போது ரா அமைப்பின் தலைவராக சமந்த் கோயல் பதவியில் உள்ளார். இவரது பதவிக் காலம் ஜூன் 30-ம் திகதி நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து ரா அமைப்பின் புதிய தலைவராக […]

உலகம்

தேர்தலுக்காக நிதி சேகரிக்கும் ஜோ பைடன்!

  • June 19, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஜோ பைடன் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட திட்டமிட்டுள்ளார். இதன்படி  ஜனாதிபதி ஜோ  பைடன்  இந்த வாரம் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் நான்கு நிதி சேகரிப்பாளர்களுடன் தனது மறுதேர்தல் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளார். ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள இந்த பிரச்சாரத்தில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முதல் பெண்மணி ஜில் பிடன் மற்றும் இரண்டாவது ஜென்டில்மேன் டக்ளஸ் எம்ஹாஃப் ஆகியோர் உள்ளடங்களாக 20 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் எனத் […]

இலங்கை

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் கணக்கான கடன்?

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் செயற்குழு கூட்டத்தில் இலங்கைக்கான வரவு-செலவுத்திட்டம் மற்றும் நலன்புரி உதவிகளுக்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுமதிக்கும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை பிணை எடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை […]

உலகம்

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்று (19) கச்சா எண்ணெய் விலை 1%க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒபெக் உறுப்பு நாடுகள் சமீபத்தில் உலக சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைத்ததால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனால் சீன பொருளாதார வளர்ச்சி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பி​ரேண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை […]

இலங்கை

எரிபொருளுக்கு தட்டுப்பாடா? – அமைச்சர் விளக்கம்!

  • June 19, 2023
  • 0 Comments

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜிசேகர உறுதியளித்துள்ளார். ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய நிலையில், அமைச்சர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா-இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) ஆகிய இரண்டிற்கும் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் ஒக்டேன் 95 அல்லது வேறு எந்த பெற்றோலிய […]