இலங்கை

இலங்கையின் வங்கிகள் அமைப்பு அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கடன் மீள் அறவிடல் சட்டங்களை மாற்றியமைப்பதற்கு முன்னதாக மாற்றுவழிமுறைகள் குறித்து மத்திய வங்கியின் ஊடாக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இலங்கையின் வங்கிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இக்கட்டமைப்பானது, ‘தற்போதைய சூழ்நிலையில் கடனை மீளச்செலுத்தமுடியாததன் விளைவாக வணிக மற்றும் கைத்தொழில் துறையினர் முகங்கொடுத்திருக்கும் அழுத்தங்களை சீரமைப்பதை முன்னிறுத்தி செயற்திறன்மிக்கதும், உரியவாறு ஒருங்கிணைக்கப்பட்டதுமான முறையொன்று கையாளப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான கலந்துரையாடல்களை அரசாங்கம் மத்திய வங்கியின் ஊடாக வர்த்தக வங்கிகளுடன் முன்னெடுப்பது […]

செய்தி வட அமெரிக்கா

வரிக் குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் ஹண்டர்

  • June 20, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் , இரண்டு கூட்டாட்சி வரிக் குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொள்ள ஒப்புக்கொண்டார், மேலும் அவரது வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, நீதித்துறையுடனான ஒப்பந்தத்தில் துப்பாக்கி குற்றச்சாட்டுக்கு தனி ஒப்பந்தம் கோரினார். பல அமெரிக்க செய்தி நிறுவனங்களுக்கு வழங்கிய அறிக்கையில், இளைய பைடனின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார், 2018 அக்டோபரில் 11 நாட்களுக்கு ஹண்டர் பைடன் கோல்ட் கோப்ரா 38 ஸ்பெஷல் கைத்துப்பாக்கியை வைத்திருந்தது தொடர்பான துப்பாக்கிக் குற்றச்சாட்டு, அவர் போதைப்பொருள் […]

உலகம்

ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் யோகா அமர்வுகள்

சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில், புதன்கிழமை (21) ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் உள்ள இந்தியாவின் ஆராய்ச்சி நிலையங்களில் யோகா அமர்வுகளை நடாத்தவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரைம் மெரிடியன் என்பது 0 டிகிரி தீர்க்கரேகையின் கோடு ஆகும். இது பூமியைச் சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு திசைகளிலும் உள்ள தூரத்தை அளவிடுவதற்கான தொடக்க புள்ளியாகும். இந்திய ஆர்க்டிக்  நிலையம் மற்றும் அண்டார்டிக்  நிலையம் என்பவற்றுக்கு அருகே விழும் நாடுகளுடன் யோகா ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட […]

உலகம்

பிரான்ஸில் காணாமல் போன இலங்கையர்

பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரி, மே மாதம் இலங்கை திரும்பத் திட்டமிடப்பட்டிருந்தார். உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அவர் திரும்பாமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டது. அந்த விசாரணைகளுக்கமைய, பொலிஸ் கான்ஸ்டபிள் பிரான்ஸிசில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் குறித்த உத்தியோகத்தர் பதவியிலிருந்து விலகியதாகக் கருதப்படும் அதிகாரியாக அறிவிக்கும் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

இலங்கை

ருமேனியாவிற்கு அனுப்புவதாக கூறி 2 மில்லியன் மோசடி செய்த பெண் கைது!

  • June 20, 2023
  • 0 Comments

ருமேனியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக கூறி மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் 2 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கந்தானை பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் முன்னர் இதேபோன்ற குற்றத்திற்காக SLBFE ஆல் கைது செய்யப்பட்டவர் என்பதும் பின்னர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

இந்தியா

நடிகர் விஜய் தான் என்னுடன் சேர்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்- சீமான் கருத்து

நடிகர் விஜய் வரட்டும் வரவேற்போம். எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. நடிகர் விஜய் தான் என்னுடன் சேர்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்ததாவது, கள் விற்பதற்கு அனுமதி கொடுத்தால் டாஸ்மாக் வியாபாரம் சரிந்து விடும் என்பதற்காக அரசு அதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் […]

உலகம்

வருமான வரி செலுத்த தவறிய பைடனின் மகன்!

  • June 20, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தன் ஹண்டர் மீது வருமான வரி செலுத்தியதாகவும், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து  டெலாவேரில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹண்டர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்குரைஞர்களுடன் உடன்பாட்டை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது புளோரிடா தோட்டத்தில் இரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டதற்காக 37 எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகள் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் மின்தடை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டில் மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களையும் நாளைய தினம் கொழும்புக்கு அழைக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. எனவே, நாளை அனைத்து வேலைத்தளங்களினதும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படும் என அவர் […]

உலகம்

உலகின் விலை உயர்ந்த நகரங்களாக 03 ஆசிய நகரங்கள் தெரிவு!

  • June 20, 2023
  • 0 Comments

உலகின் மிக விலையுயர்ந்த உயர்தர நகரங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை ஆசிய நகரங்கள் பிடித்துள்ளன. இதன்படி மிக விலையுயர்ந்த நகரமாக முதலாவது இடத்தை சிங்கப்பூர் பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து  சீனாவின் ஷாங்காய் நகரமும், மூன்றாது இடத்தை  ஹாங்காங் நகரமும் பிடித்துள்ளது. சுவிஸ் செல்வ மேலாளர் ஜூலியஸ் பேர் குரூப் லிமிடெட்டின் அறிக்கையின்படி, இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு சொத்துக்கள், கார்கள், வணிக வகுப்பு விமானங்கள், வணிகப் பள்ளி மற்றும் பிற ஆடம்பரங்கள் போன்ற பல்வேறு காரணிகளை ஆய்வு […]

மத்திய கிழக்கு

சூடானில் இருந்து 5 இலட்சம் பேர் வெளியேற்றம்; ஐ.நா உயர் ஸ்தானிகர்

  • June 20, 2023
  • 0 Comments

சூடானிலிருந்து 5 இலட்சம் பேர் வெளியேறியுள்ளதுடன் , 20 இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐநா உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி இன்று கூறியுள்ளார். கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். சூடானில் மோதல்கள் ஆரம்பித்த பின்னர், அங்கிருந்து வெளியேறியோரின் எண்ணிக்கை இன்று அரை மில்லியனைக் கடந்துள்ளதாகவும் கிராண்டி கூறினார். ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல் புர்ஹான் தலைமையிலான சூடான் இராணுவத்துக்கும், ஜெனரல் மொஹம்மத் ஹம்தான் டக்லோ […]