ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம்!

  • June 3, 2023
  • 0 Comments

மெல்போர்னில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரெலிய நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் மார்னிங்டன் பகுதியில் 2.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பூமிக்குள் சுமார் 08 கிலோமீற்றர் ஆழத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. கடந்த 29ம் திகதி இரவு 11.40 மணியளவில் சன்பரி பகுதியை மையமாக கொண்டு 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது போரோனியா பகுதிக்கு அருகே கடந்த 30ம் […]

பொழுதுபோக்கு

அம்மா வயது நடிகைக்கு அம்மாவாகும் சமந்தா?

  • June 3, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த சமந்தா இப்போது பாலிவுட்டையும் அசரடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது. தி பேமிலி வெப் சீரிஸில் சமந்தாவின் கேரக்டர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், சில காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார் சமந்தா. […]

இலங்கை

இலங்கையில் நாளை நள்ளிரவு முதல் விலை குறையும் லிட்ரோ எரிவாயு

  • June 3, 2023
  • 0 Comments

இலங்கையில் நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனை அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 300 ரூபாய்க்கும் அதிக தொகையில், குறைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம், விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகம்

ஊழியர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

  • June 3, 2023
  • 0 Comments

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை செய்ய வேண்டும் என மெட்டா நிறுவனம் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமானது தற்போது புதிய அறிவிப்பை தங்கள் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. அதன் படி தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் செப்டம்பர் 5 முதல் வாரத்தில் 3 நாட்கள் அவரவர்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானாது, அலுவலத்தில் நேரடியாக வேலை […]

வாழ்வியல்

உயரமான குதிகால் செருப்பு அணிபவரா நீங்கள்? அவதானம்

  • June 3, 2023
  • 0 Comments

மிகவும் உயரமான குதிகால் செருப்பு அணிபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே பெரும்பாலான இளம் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதை தான் விரும்புவதுண்டு. ஆனால் இந்த ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்கள் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. ஹைஹீல்ஸ் அணிவதற்கு முன்பதாக, அதை அணியக்கூடியவர்கள் முன்னும் பின்னும், சிலவற்றை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்பு அதிக உயரமான செருப்புகள் மற்றும் வலி மிகுந்த இறுக்கமான பிடிப்புடன் கூடிய […]

இந்தியா

இந்தியாவை அதிர வைத்த ரயில் விபத்து – கைகால்கள் அற்ற உடல்கள் – தப்பியவரின் பதிவு

  • June 3, 2023
  • 0 Comments

இந்தியாவில் விபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணியொருவர் நெஞ்சை உலுக்கும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். விபத்தின் போது தனது அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டு தகவல் வெளியிட்டுள்ளார். ஹவ்ராவிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கொரமன்டல் ரயிலின் ஒரு பயணி என்ற அடிப்படையில் இந்த விபத்திலிருந்து உயிர்பிழைத்தமை குறித்து நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன். வரலாற்றில் மிகப்பெரிய ரயில்விபத்தாக இது இருக்கலாம் மூன்று புகையிரதங்கள் இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளன கொரமண்டல்எக்ஸ்பிரஸ்- ஹெவ்ரா எஸ்எவ் மற்றுமொரு சரக்கு ரயில். கொரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு […]

ஆசியா

சிங்கப்பூரில் கடுமையாகும் சட்டம் – மீறினால் 30 ஆண்டுகள் சிறை

  • June 3, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை அதிக அளவு வைத்திருந்தால் இனி அதற்கான தண்டனைகள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் அதற்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 21 அன்று நிறைவேற்றப்பட்ட “போதைப்பொருள் சட்டம் திருத்த மசோதா” அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நடைமுறைக்கு வருகிறது. பழைய நடைமுறைப்படி, ​​போதைப்பொருளை வைத்திருந்தால் (எடையைப் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்) 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது S$20,000 வரை […]

அறிந்திருக்க வேண்டியவை

மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க ரோபோ – மனிதர்களை கட்டுப்படுத்தும் அபாயம்

  • June 3, 2023
  • 0 Comments

மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க மனித உருவ ரோபோவை பிரித்தானிய சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் இவை மேம்படுத்தப்பட்டுள்ளது. அமெக்கா என்ற அந்த ரோபோவின் முகபாவனைகளைக் கட்டுப்படுத்த அதன் தலையில், சமிக்ஞைகளை இயக்கங்களாக மாற்றுவதற்கான சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், அமெக்காவின் புன்னகை, கண் சிமிட்டல் போன்றவை மனிதர்களைப் போன்றே இருப்பதாகவும், அதை உருவாக்கிய நிறுவனத்தின் தலைவர் தெரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அமெக்காவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ரோபோக்கள் […]

ஆசியா

சீனாவின் காதலனுக்காக எடை குறைத்து உயிரிழந்த சிறுமி

  • June 3, 2023
  • 0 Comments

சீனாவின் Guangdong மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்த இளைஞன் அன்பைப் பெற தீவிரமான முயற்சியை மேற்கொண்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெறறுள்ளது. குறித்த பெண் காதலித்த நபர் அவரைவிட மெலிந்து காணப்பட்டுள்ளார். இதனால் காதலனுக்காக 15 வயதான அந்தப் பெண் அவரது எடையை 25 கிலோகிராம் வரை குறைத்ததாக தெரியவந்துள்ளது. இதனால் Anorexia நோய்க்குள்ளான அந்த பெண் 20 நாட்களுக்கு மேலாக நினைவிழந்த நிலையில் இருந்து உயிரிழந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் அந்தப் […]

ஐரோப்பா

பிரான்ஸில் கொள்ளையர்கள் அட்டகாசம் – 80,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் திருட்டு

  • June 3, 2023
  • 0 Comments

பிரான்ஸில் Chambourcy (Yvelines) நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த கடை உடைக்கப்பட்டு அங்கிருந்த 80,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இங்குள்ள Cleor எனும் புகழ்பெற்ற நகைக்கடையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு கடையினை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். புதன்கிழமை காலை 8 மணி அளவில் கடையின் ஊழியர்கள் கடையினை திறப்பதற்காக வருகை தந்த போது கடை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். […]