இலங்கை

சடலம் மீது சேட்டை செய்த இளைஞர்களினால் ஏற்பட்ட பதற்றம்!

குளியாபிடிய உள்ள நகரப் பகுதியில் பொசோன் தினத்தை முன்னிட்டு “பேய் வீடு“ ஒன்றை அங்குள்ள ஒருவர் நிர்மாணித்திருக்கிறார். இந்த பேய் வீட்டில் சவப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டு அதில் சடலம் போல ஒருவரை படுக்க வைத்திருக்கிறார்கள். அந்த சடலம் திடிரென எழுவதும், பின்னர் படுத்துக்கொள்வதுமாக இருந்துள்ளது. இந்த பேய் வீட்டை பார்க்க மக்கள் அதிகளவில் வந்துள்ளனர். இப்படி அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று, சடலம்போல பேய் வீட்டில் படுத்திருந்தவரிடம் சேட்டை செய்துள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சடலமாக […]

இந்தியா

ஆந்திராவில் வயலில் கிடைத்த பொக்கிஷம் : விரையும் மக்கள்!

  • June 6, 2023
  • 0 Comments

ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றிய 30 கேரட் வைரத்தை  2 கோடி ரூபாயிற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம்,  கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி,  துக்கிலி,  மடிகேரா,  பெகதிராய்,  பேராபலி,  மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல் வெளிகளில்  மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு  விவசாயி ஒருவர்  60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் […]

வட அமெரிக்கா

கனடாவில் குடியேற விரும்புவோருக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவித்தல்

  • June 6, 2023
  • 0 Comments

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது. ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். *சுகாதார துறை *விஞ்ஞான, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள் *தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் ஒப்பந்த […]

பொழுதுபோக்கு

“இந்தியன் 2” பிரம்மாண்ட இயக்குனர் இரகசியமாக வைத்திருந்த அந்த ஒரு ரகசியம் கசிந்தது

  • June 6, 2023
  • 0 Comments

பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். இதற்கு காரணம் அவர் இயக்கிய படங்கள் தான். வழக்கமாக இயக்குனர்கள் சண்டைக்காட்சிகளை தான் பிரம்மாண்டமாக எடுப்பார்கள், ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஒருபடி மேலே போய் பாடல்காட்சிகளில் வித்தியாசமாக யோசித்து பிரம்மாண்டத்தை புகுத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருப்பார். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கின்றனர். தற்போது ஷங்கர் இதுவரை இல்லாத வகையில் புது முயற்சியாக ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார். அதில் […]

உலகம்

தீவிரமடையும் போர் களம்! உக்ரைனில் நீர்மின் நிலைய அணை மீது தாக்குதல்

சோவியத் கால அணையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள உக்ரைன் நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டது தொடர்பான காணொளியை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் சோவியத் கால ககோவ்கா நீர்மின் நிலைய அணை காணப்படுகிறது. உக்ரைனின் பிரதான நீர்மின் நிலையத்திற்கு நீரை வழங்கும் முக்கிய அணை இதுவாகும். இதற்கு காரணம் யார் என்று தெரியாத நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர். அதே […]

இந்தியா ஐரோப்பா

அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்

  • June 6, 2023
  • 0 Comments

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்து உள்ளனர். இந்நிலையில், விமானத்தில் என்ஜின்களில் ஒன்று திடீரென பழுதடைந்து உள்ளது என கூறப்படுகிறது. இதனால், ரஷ்யாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதுபற்றி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் வெடித்த எரிவாயு – அண்டை வீட்டாரின் துணிகர செயல்

  • June 6, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் போர்ன்மவுத் நகரில் உள்ள வீட்டில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். பிரித்தானியாவின் போர்ன்மவுத் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது, இதில் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த வெடிப்பு விபத்து மிக பிரம்மாண்டமாக இருந்த நிலையில், அருகில் உள்ள வீடுகளையும் இந்த வெடிப்பு விபத்து உலுக்கியது.மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் உள்ள […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

உலகிலேயே மிகச் சிறந்த கணவர் : AI ஐக் கரம்பிடித்த பெண்ணின் நெகிழ்ச்சி கருத்து!

  • June 6, 2023
  • 0 Comments

தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI  எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT  தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரெப்லிகா எனும் AI சாட்பாட் தற்போது பிரபலமாகி வருகிறது. இது மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் பேசுவதற்காக உருக்கப்பட்டுள்ளது. இதனை ரஷ்யாவைச் சேர்ந்த யூஜினியா குய்டா என்பர் தான் உருவாக்கினார். அண்மையில் ரெப்லிகாவின் பிரீமியம் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. […]

இலங்கை

இலங்கையில் நடைமுறைக்கு வரும் தடை! தீவிரப்படுத்தப்படும் சோதனை நடவடிக்கை

இலங்கையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடம் முதல் தடை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் இன்று முதல் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் சுபுன் எஸ்.பத்திரன குறிப்பிட்டுள்ளார். அ தன்படி, ஒருமுறை பயன்படுத்தி கழிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் கரண்டிகள், ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள், கப் (யோகட் […]

இலங்கை

கட்டுநாயக்கவில் விமானங்கள் தரையிறங்கும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

  • June 6, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வருடத்திற்கு 50 வீதத்தால் கட்டணத்தை  குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் குறித்து விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்தள விமான நிலையத்திற்கு அதிகளவு விமானங்களை வரவழைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக முதல் […]