இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு வலுவான கல்வி முறைமை அவசியம் – ஜனாதிபதி!
2048 ஆம் ஆண்டளவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு வலுவான கல்வி முறைமை மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பிற்கான அமைச்சர்கள் குழுவை ஆதரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்படி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாட்டின் மனித வளத்தை சீரமைத்தல், கல்வி முறையை மேம்படுத்துதல், மற்றும் நாட்டை […]













