பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது
வெசாக் தினத்தன்று வீட்டில் சடங்குகளை செய்து கொண்டிருந்த 47 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்த 27 வயது நபர் வெலிகந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்தவர். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வீட்டிற்கு வந்த இந்த இளைஞன், வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. […]













