போட்டியில் பங்கேற்ற நாய்களுக்கு விஷம் கலந்த உணவு: பிரான்ஸில் அனைவர் மனதை கலங்க வைத்த சம்பவம்
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி ஒன்றில், தங்கள் உரிமையாளர்களுடன் கலந்துகொண்ட வளர்ப்பு நாய்களுக்கு விஷம் வைக்கப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Canicross என்பது நாடுகளுக்கிடையே நாய்களுடன் அவற்றின் உரிமையாளர்கள் ஓடும் ஒரு பந்தயமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரான்சுக்கு தெற்காக அமைந்துள்ள Vauvert நகரில், நாய்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.அப்போது, வழியில் கிடந்த மீட் பால்ஸ் என்னும் மாமிச உணவை நாய்கள் சாப்பிட்டுள்ளன. சாப்பிட்ட 15 நிமிடத்தில் மூன்று நாய்கள் உயிரிழந்துவிட்டன, நான்காவது நாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு […]













