புதிய புலம்பெயர்தல் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ; பிரித்தானிய நாடாளுமன்றம் முன் திரண்ட நூற்றுக்கணக்கானோர்
புதிய புலம்பெயர்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கம் முன் திரண்டார்கள். பிரித்தானிய அரசு, பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோருக்கெதிராக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.அது தொடர்பான மசோதா ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேனால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மசோதா மீதான விவாதம் துவங்கியுள்ளது. அந்த சட்டம், பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோரை ஜாமீனில் வரமுடியாத வகையில் கைது செய்து, நாடு கடத்தவும், அப்படி […]













