இலங்கை

இலங்கை சிறையில் பன்றி இறைச்சி உட்கொண்ட 15 பேர் – இருவர் மரணம்

மகசின் சிறை கைதிகளில் இருவர் பன்றி இறைச்சி கறி சாப்பிட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மற்றுமொரு கைதி ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐஸ் போதைப்பொருளுடன் அவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதி ஒருவரின் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் பன்றி இறைச்சியுடன் தயாரிக்கப்பட்ட சொற்று பொதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சொற்று பொதியை அந்த கைதி 15 கைதிகளுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார்., அதன் பிறகு மூன்று கைதிகளும் நோய்வாய்ப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பன்றி இறைச்சி கறியை சாப்பிட்டதனால் ஏற்பட்ட ஒவ்வாமையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சொற்று பொதியை உண்ட ஏனைய 12 பேருக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் பொரளை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் பொலிஸ் பிரேத அறையில் நேற்று இடம்பெற்றன.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்