வட அமெரிக்கா

100 மில்லியன் அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அமெரிக்கர்களில் 100 மில்லியனுக்கும் அதிமாக மக்களை காற்றின் தரத்தைக் கவனிக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் காட்டுத்தீயால் புகைமூட்டம் இருநாட்டு எல்லையைச் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலை நீடிக்கிறது.

அமெரிக்காவின் கிழக்குக் கடற்பரப்பிலிருந்து மத்திய மேற்குப் பகுதி வரை புகைமூட்டம் பரவியுள்ளது.

டெட்ராய்ட் (Detroit), பிட்ஸ்பர்க் (Pittsburgh) போன்ற நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. வார இறுதியில், காற்றின் தரம் சற்று மேம்படக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

மத்திய மேற்குப் பகுதியில் தொடரும் இடியுடன் கூடிய மழையும் புகையை வெளியேற்ற உதவலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புகைமூட்டம் எப்போது முற்றிலும் மறையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கர்கள் காற்றுத் தரக் குறியீடுகளைப் பார்க்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். சுவாச நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடா அதன் ஆக மோசமான காட்டுத்தீ பருவத்தைக் கையாளப் போராடுகிறது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்