இலங்கை செய்தி

மன்னாரில் பொலிசாரை தாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட 10 பேர் கைது

மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிடப்படும் பெண்கள் உட்பட 10 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சனிக்கிழமை மாலை மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள உயிலங்குளம் மதுபானசாலை அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் சிலர் உயிலங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உயிலங்குளம் போலீசார் உயிலங்குளம் மதுபான சாலைக்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.

இதன் போது அவ்விடத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் சிலரை பொதுமக்கள் போலீசாருக்கு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய முற்பட்ட போது அவ்விடத்தில் நின்ற சிலர் பொலிசாரை தாக்கி உள்ளார்கள்.

தாக்குதலில் காயமடைந்த போலீசார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதன் போது நேற்றைய தினம் (24) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் 9 பேர் இன்றைய தினம் (25) உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் மாலை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன் ஆஜர் படுத்திய தை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் சில மாதங்களுக்கு முன் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தின் போது மரணித்தவர்களின் உறவினர்கள் என தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை