இலங்கை

காற்றின் வேகம் திடீரென அதிகரிப்பு – கடலுக்கு செல்ல வேண்டாம்

யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் நேற்று இரவு முதல் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை (பேருவளை வரை) ஆகிய கடல் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை தொழிலுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது கடலுக்குச் சென்றுள்ள சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் ஏதேனும் இருப்பின், அவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பான கரைக்குத் திரும்புமாறு பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இரவு வேளையில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், எக்காரணம் கொண்டும் தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்