இலங்கை

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பரவிய தொற்று – ஒருவர் பலி

இலங்கையில் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக  தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அவர் ஏப்ரல் 10 ஆம் திகதி  அன்று இலங்கைக்குத் திரும்பினார். பின்னர் நான்கு நாட்கள் காய்ச்சலுடன் தனது வீட்டில் இருந்தார். ஏப்ரல் 14 ஆம் திகதி தனியார் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் 15  ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மலேரியா பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து திரும்பி வருபவர்களை பரிசோதிப்பதற்கான சரியான பரிசோதனை திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்