இலங்கை

இலங்கையில் சுனாமி அபாயம் தொடர்பில் ரிங்டோன் அறிமுகம்!

சுனாமி அபாயம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் தொடர்பில் கையடக்கத் தொலைபேசியின் ரிங்டோன் மூலம் அவர்களுக்கு தெரிவிக்கப்படுமென, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணியைச் செய்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோர் அதிகாலை ஒரு மணி முதல் 4.00 மணி வரை உறங்கிக் கொண்டிருப்பதால், அந்த நேரத்தில் சுனாமி அபாயம் தொடர்பில் தகவல் கிடைத்தால், அனைத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் ஒலிக்கும் முறைமை தயார் செய்யப்படுமென்றும், பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் செயலிழந்தால், எதிர்காலத்தில் ஆபத்தான நிலைமை ஏற்படக்கூடுமென சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்