அல்ஜீரியாவில் ஆதரவற்றோர் விடுதியில் தீவிபத்து – 11 பேர் பலி!
அல்ஜீரியாவின் புறநகர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில், தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்புத் துறை இன்று அறிவித்துள்ளது.
“தீயை அணைக்கும் முயற்சிகளை குடிமைப் பாதுகாப்புத் துறை மேற்கொண்டுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஜீரியா பல நாட்களாக கடும் வெப்ப அலையால் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டில் கடந்த ஒரு வார காலத்திற்குள் கிட்டத்தட்ட 1,000 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.




