செய்தி

அமெரிக்காவில் இசைவிருந்து நிகழ்ச்சியில் பரபரப்பு – 9 பேர் படுகாயம்

அமெரிக்காவில் இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் ஜாஸ்பர் நகரின் வடக்கே உள்ள கவுண்டி ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தின இரவு இசைவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்பொழுது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​விருந்தில் சுமார் 250 பேர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஜாஸ்பர் மெமோரியல் மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் சிலர் மேல் சிகிச்சைக்காக டெக்சாஸின் பியூமண்டில் உள்ள கிறிஸ்டஸ் செயின்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி