உலகம் செய்தி

12 ஆவது நாளாக தொடரும் போர்: 43 ஆயிரம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்!

People walk out of the terminal upon their arrival from Amman, Jordan at John F. Kennedy International Airport in New York, Thursday, March 5, 2026. (AP Photo/Yuki Iwamura)

ஈரான்மீதான இஸ்ரேல், அமெரிக்க கூட்டு தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை மத்திய கிழக்கில் இருந்து 43 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளியேறியுள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர் என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை சிறப்புப் பணிக்குழுவைவொன்றை அமைத்திருந்தது. இதுவரை 30 ஆயிரம் பேருக்கு நேரடியாக இதன்மூலம் உதவி வழங்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் பல தனிவிமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பயணிகள் வணிகரீதியான விமானங்களையே பயன்படுத்தியதால் அவை குறைந்த அளவிலான பயணிகளுடனேயே இயங்கின.

தற்போது நிலப்பரப்பு மற்றும் வான்வழி மூலமான வெளியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, மத்திய கிழக்கு போர் இன்று 12 ஆவது நாளாக தொடர்கின்றது.

ஈரான் ஏவிய 5 ஏவுகணைகளை தமது பாதுகாப்பு படை இடைமறித்து அழித்ததாக சவுதி தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி