ஒரே வருடத்தில் 6 லட்சம் டொலர் வருமானம் ஈட்டிய அமெரிக்க ஜனாதிபதி பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய துணைவியார் ஜில் பைடன் இருவரும் சேர்ந்து 619,976 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. தங்களது வருமானத்தில் 23.7 சதவீதத்தை அவர்கள் வரியாகச் செலுத்தினர்.
இவ்விவரத்தை பைடன் திங்கட்கிழமையன்று வெளியிட்டார். ஜனநாயகக் கட்சி சார்பில் இவ்வாண்டு மீண்டும் பைடன் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இதனிடையே, அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்துக் களம் காணவுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், உள்நாட்டு வருவாய்த் துறை தணிக்கை செய்து வருவதால் தனது வருமான விவரத்தை வெளியிட இயலாது என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், சென்ற ஆண்டில் தான் ஈட்டிய வருமானம் குறித்த விவரத்தை வெளியிடத் தடையில்லை என்று உள்நாட்டு வருவாய்த் துறை கூறிவிட்டபோதும் அவர் அவ்விவரத்தை வெளியிடவில்லை.
ஜனாதிபதி பைடனும் அவர்தம் துணைவியாரும் தங்களது வருமானத்தில் ஐந்தில் நான்கு பங்கைத் தங்களது வேலைமூலம் ஈட்டினர்.