ரஷ்யாவுக்கு உளவுத் தகவல்கள் பகிர்வு – இத்தாலியில் இரு முன்னாள் இராணுவத்தினர் கைது
இத்தாலியில் உளவுத் தகவல்களை ரஷ்ய உளவாளிகளுக்கு பகிர்ந்துகொண்ட குற்றசாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியின் உளவுத்துறையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோம் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இன்று தெரிவித்தது.
சந்தேகபர்களின் பெயரை வெளியிடாத வழக்கறிஞர் அலுவலகம், கராபினேரி இராணுவக் காவல்துறையின் 59 வயது முன்னாள் அதிகாரி என்றும், உளவுத்துறையின் ஒரு பகுதியாகப் பணியாற்றியவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பரிமாற்றம் செய்தது, அத்துடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை அனுமதியின்றி அணுகியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மே 2025-ல் தொடங்கப்பட்ட ஒரு விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்காக பணம் பெற்றதாகவும் வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.




