நீராடச் சென்ற இருவர் பலி – மேலும் அறுவர் மாயம்
தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நிக்கவரட்டிய, குரட்டியகஹமுல பகுதியில் இந்த சம்பவம் இன்று (16) மாலை இடம் பெற்றுள்ளது
நீரில் மூழ்கியவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அறுவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமற்போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




