8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவு!
அமெரிக்காவில் மத்திய அரசில் பணிப்புரியும் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை மற்றும் பணியாளர் மேலாண்மை அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, அரசின் கொள்கைகளைச் செயல்படுத்தத் தவறும் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்ய அரசுத் துறைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதித சம்பளம், சம்பளத்துக்கு இணையான வேலை செய்யாமல் இருப்பவர்கள், தேவைக்கு அதிகமான பணியாட்கள் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக தெரியவந்துள்ளது.





