செய்தி தமிழ்நாடு

ஜெராக்ஸ் எடுக்கும் நேரத்தில் திருட்டு

கோவை அரசூர் பகுதியைச் சார்ந்த விஷ்ணுவர்தன்.

தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 24ம் தேதி ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் அரசு பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஜெராக்ஸ் கடைக்குள் சென்றுள்ளார்.

ஜெராக்ஸ் எடுத்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருந்துள்ளது.

இருசக்கர வாகனம் நிறுத்தி சென்ற 5 நிமிடத்திற்கு உள்ளாக காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த இவர் தாமாக இருசக்கர வாகனத்தை இத்தனை நாட்களாக தேடி வந்துள்ளார்.

இருப்பினும் வாகனம் கிடைக்காத நிலையில் நேற்றைய தினம் இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் திருடு போன போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி