ஐரோப்பா

ஜெர்மனியில் மர்ம நபர்களால் காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனி நாட்டில் A 46 அதிவேக பாதையில் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்ஏப்ரல் 15 ஆம் திகதி ஜெர்மனியின் அதிவேக போக்குவரத்து பாதை A 46 இல் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அதாவது ஹைட்பேர் பிரதேசத்தை நோக்கி பயணித்த ஒரு வாகனத்தினுடைய வாகன சாரதியானவர் மற்றைய வாகனத்தை முந்தி செல்ல முயற்சி செய்த பொழுது மற்றைய வாகனத்தில் இருந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தை ஓட்டி வந்த வாகன சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் குறித் கும்பலை தேடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர்கள் ரஷ்ய நாட்டினுடைய வாகன தகடுகளை வைத்து இருந்தார்கள் என்று விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.

மேலும் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலின் நோக்கம் என்ன என்பதனை பொலிசார் மேலும் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

குறித்த அதிவேக பாதையானது சில மணி நேரத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்