இந்தியா விளையாட்டு

மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட காரணம் என் மகன்தான் – பியூஷ் சாவ்லா

இவ்வருட சீசன் முழுவதும் மும்பை அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களாக பியூஷ் சாவ்லா இருந்து வருகிறார். மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

கடந்த சீசனில் வர்ணனை செய்து கொண்டிருந்த பியூஷ் சாவ்லா, நடப்பு சீசனில் களமிறங்கி மிரட்டலாக விளையாடி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்றைய ஆட்ட நிறைவின் போது வர்ணனையாளர்களால் நடப்பு தொடர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பியூஷ் சாவ்லா கூறியதாவது-

இவ்வருட ஐபிஎல் தொடரை நான் என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன். ஏனென்றால் நான் இந்திய அணிக்காக ஆடிய போது, என் மகன் குழந்தையாக இருந்தார். கிரிக்கெட்டை அவரால் அந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் இப்போது அப்படியல்ல. கிரிக்கெட்டை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. என் ஆட்டத்தை தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்க்கிறான்.ஒவ்வொரு ஆட்டம் முடிவடைந்த பின்னரும், என்னுடைய பந்துவீச்சை இருவரும் சேர்ந்து ரிவ்யூ செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே