இலங்கை

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சதான் – ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் அதிரடி அறிவிப்பு!

நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவராகச் செயற்பட்டு வருகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதி என நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது வருமாறு:

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச களமிறங்கியதால் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கப்பட்டது.

தோல்வி உறுதி என்பது தெரிந்தும், களமிறங்க வேண்டாம், உங்கள் அரசியல் எதிர்காலம் நாசமாகிவிடும் என நாமலிடம் பல உறுப்பினர்கள் கூறினர். அவரது குடும்ப உறுப்பினர்கள்கூட இதனை வலியுறுத்தினர். ஆனால் நெருக்கடியான சூழ்நிலையிலும் சவாலை ஏற்ற இளம் தலைவர் அவர். அதுமட்டுமல்ல நாடாளுமன்றத்திலும் துணிவுடன் செயற்பட்டு வருகின்றார்.

ஜனாதிபதி தேர்தலில் 2.5 சதவீத வாக்குகளே கிடைக்கப்பெற்றன. ஆனால் பொதுத் தேர்தலில் அது 10 சதவீதமாக அதிகரித்தது. நாமல் அன்று வழங்கிய உத்வேகமே இதற்கு காரணம். அதேவேளை, நாமல் ராஜபக்சதான் அடுத்த ஜனாதிபதி என நாட்டு மக்கள் கூறிவருகின்றனர். அது உண்மை. அடுத்த தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்போம்.” – என்றார் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்