21 மே தின பேரணிகளை நடத்துகிறது NPP!
தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இம்முறை மாவட்ட ரீதியிலேயே நடத்தப்படவுள்ளது.
பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
எரிசக்தி தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களைக்கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மாவட்ட ரீதியில் 21 மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளன.
தேசிய மக்கள் சக்தி வழமைபோல் நடத்தும் பிரமாண்டமான பிரதான மேதின பேரணி இம்முறை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





