ஆசியா

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ள பாகிஸ்தான் அரசு!

புதிதாக பிறக்கவுள்ள 2024ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டு முடிவடைந்து 2024ம் பிறக்கவுள்ள நிலையில், பெரும்பாலான உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அந்த நாட்டின் காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் தடைவிதித்துள்ளார்.

புத்தாண்டுக்கான தடை குறித்து மக்களிடம் பேசி பேசிய பொறுப்பு பிரதமர் கக்கர், ‘காசாவில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

மேலும், “விதிமுறை அனைத்தையும் மீறி இஸ்ரேல் படை 21 ஆயிரம் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. இதில் 9 ஆயிரம் குழந்தைகள் அடங்குவர். அப்பாவி குழந்தைகள் படுகொலை, காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதமின்றியுள்ள பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை என்பது ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், முஸ்லிம் உலகத்தையும் கவலையைில் ஆழ்த்தியுள்ளது. பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் நாடு இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருக்கிறோம்” என்றார்

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்