ஆசியா

சிங்கப்பூரில் பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த பேருந்து சாரதி

சிங்கப்பூர் அதிவேக வீதியில் சாப்பிட்டுக்கொண்டும், போனைப் பயன்படுத்திக்கொண்டும் பேருந்து ஓட்டிய ஓட்டுநர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த மே 12 ஆம் திகதி இரவு 7.20 மணியளவில் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த காட்சிகள் @painhub243b என்ற பயனரால் TikTok செயலியில் பதிவேற்றப்பட்டன.

அந்த வீடியோவில், ஓட்டுநர் தனது இரு கைகளையும் வாகனத்தின் ஸ்டீயரிங்கில் இருந்து முழுவதுமாக எடுத்துவிட்டு எதோ சாப்பிடுகிறார்.

மேலும், ஓட்டுநர் ஒற்றைக்கையில் தனது போனை பார்ப்பது போலவும் அந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து SMRT பேருந்துகளின் துணை நிர்வாக இயக்குநர் வின்சென்ட் கே கூறியதாவது: “பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுனரின் நடத்தையை மன்னிக்க இயலாது. பயணிகள் மற்றும் பிற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பே முதன்மையான ஒன்று.”

“மேலதிக விசாரணைகளுக்காக ஓட்டுநர் பணியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்துள்ளோம்” என்றார்.

https://web.facebook.com/watch/?v=263137229579570&_rdc=1&_rdr

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!