வட அமெரிக்கா

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்!

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமையால் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய் சுற்றுலா சென்றதால் வீட்டில் தனியாக விடப்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளார்.

ஒகியோ மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்டல் கேன்டலாரியோ என்ற 31 வயதான பெண், தனது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு 10 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

வீடு திரும்பிய அவர், குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்ததால் மருத்துவ உதவியாளர்களை அழைத்துள்ளார்.

அவர்கள் குழந்தை இறந்து கிடந்ததை உறுதி செய்ததுடன் படுக்கையில் மலம், சிறுநீர் இருந்ததை பார்த்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து, விசாரணை நடத்தி கேன்டலாரியோவை பொலிஸார் கைது செய்தனர்.

அடிக்கடி குழந்தையை வீட்டில் தனியாக விட்டு செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்ததாகவும், பல முறை கூறியும் அவர் கேட்கவில்லையெனவும் பொலிஸாரிடம் அக்கம்பக்கத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

 

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்