இலங்கை

பால்மா விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பால் மா இறக்குமதியாளர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பால் மாவின் விலை அதிகரிக்கப்படலாம் என அதன் உறுப்பினர்  லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ஒரு கிலோ பால் பவுடருக்கு தற்போது விதிக்கப்படும் 650 ரூபாய் வரியை நீக்கினால், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பாக்கெட்டை 600 ரூபாய்க்கு கொடுக்கலாம்.

கடந்த இரண்டு வார காலப்பகுதியில் பால்மாவிற்கான வரி 05 வீதத்தில் இருந்து 10 வீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும்  கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் பால்மா விற்பனை 50 சதவீதத்தால் குறைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்