இலங்கை செய்தி

தையிட்டியில் பெரும் பதற்றம்: வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது இன்று காலை கடும் பதற்றமான சூழல் நிலவியது.

போராட்டத்தின் போது சிவில் சமூகச் செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஒருவர் உட்பட மொத்தம் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன்போது, அங்கு நின்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பொலிஸாரால் கீழே தள்ளி விழத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

தற்போது அந்தப் பகுதியில் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும், மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை