உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்

  • May 16, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனானின் தேசிய செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, சர்பின் சந்திப்பு பகுதியை சுற்றியுள்ள இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட சேதம் மற்றும் நிலைமை குறித்து கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இலங்கை செய்தி

சைபர் தாக்குதலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் – ஹர்ஷ குற்றச்சாட்டு

  • April 25, 2026
  • 0 Comments

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி நுணுக்கமான இணையவழி தாக்குதல் அல்ல என்றும், அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மில்லியன் கணக்கான ரூபாய்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக, அந்த வங்கிக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை அனுப்பிச் சரிபார்க்கும் வழக்கமான நடைமுறை […]

செய்தி

பொறுப்பற்ற செய்தி வெளியீடு ஜனநாயக செயல்முறையையே பாதிக்கக்கூடும் – பிரித்தானிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை

  • April 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் ஊடகங்களில் வெளியாகும் தவறான மற்றும் தெளிவற்ற செய்திகளால், வேல்ஸ் வாக்காளர்கள் அரசியல் தகவல்களில் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர் என புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்த 3,000 க்கும் மேற்பட்ட செய்திகளில், இங்கிலாந்துக்கான கொள்கைகள் முழு பிரித்தானியாவுக்கும் பொருந்துவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வேல்ஸில் அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் தவறான புரிதலுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “அரசாங்கம்” போன்ற பொதுவான சொற்கள் பயன்படுத்தப்பட்டதால், எந்த நிர்வாகம் எந்தக் கொள்கைக்கு […]

இலங்கை செய்தி

தேங்காய் எண்ணெயில் கலப்படம் – 05 வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

  • April 2, 2026
  • 0 Comments

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்த 05 வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்குகள் வியாழக்கிழமை (02) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட துடன், குற்றங்களுக்கான அபராதம் மற்றும் தண்டனை குறித்து அறிவிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 01 மற்றும் 07 ஆம் திகதிகளுக்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. […]