இலங்கை

இந்த வாரம் முதல் விசேட அரச விடுமுறை இரத்து!

  • April 6, 2026
  • 0 Comments

புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது இரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார். நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

11 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

  • April 6, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புதுடெல்லியில் இருந்து AI-277 என்ற விமானம் மூலம் அவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரது பயணப் […]

இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலையும் சடுதியாக அதிகரிப்பு

  • April 5, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய LAUGFS சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாயாகும் அதேநேரம் 5 கிலோ கிராம் நிறையுடைய LAUGFS சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,280 ரூபாயாகும்.

இலங்கை

மண்சரிவு எச்சரிக்கை!

  • April 5, 2026
  • 0 Comments

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் ‘அவதானத்துடன் இருக்குமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், நேற்று (04) மாலை 5.00 மணி முதல் இன்று மாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் […]

இலங்கை

தேவாலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பு!

  • April 5, 2026
  • 0 Comments

இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள முக்கிய தேவாலயங்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

ஆழ்கடலில் சிக்கிய படகில் 300 கிலோ ஹெரோயின்!

  • April 1, 2026
  • 0 Comments

பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இன்று (01) காலை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,  சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மேலும்,  அதிலிருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப் போதைப்பொருளானது, சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதி […]

இலங்கை

8,300 மாணவர்களுக்கு 3 ‘A’ சித்திகள்!

  • April 1, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றனர். இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இன்று முதல் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு

  • April 1, 2026
  • 0 Comments

இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,  30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 – 60 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாயாக வசூலிக்கப்படும். 61 – 90 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. 91 – 180 அலகுகள்: 7.2% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

  • March 31, 2026
  • 0 Comments

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். அதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியன 30 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாயாலும், தேநீர் வகைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக  ஹர்ஷன ருக்ஷான் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

இனி வீட்டிலிருந்தே தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள்!

  • March 31, 2026
  • 0 Comments

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகளை பொதுமக்கள் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக e-Service எனும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் இனி கிராம அலுவலர் அலுவலகங்களுக்கோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இன்றி, eservices.elections.gov.lk என்ற இணையத்தளம் அல்லது வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த இணைய நுழைவாயில் ஊடாக 2026ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் புதிய பதிவுகளை […]

error: Content is protected !!