தனியார் பேருந்துகளின் சேவையை 50 சதவீதம் குறைக்க நடவடிக்கை!
எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களின் விலையை அதிரிக்க தனியார் போக்குவரத்து சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனியார் பேருந்துகளின் சேவையை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், பேருந்துகளை நட்டத்துடன் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளை […]



