பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற ‘பிள்ளையன்’ என்பவரை ஜூலை 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தேக நபர் இன்று காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பிள்ளையானுக்கு எதிராக […]



