கிழக்கில் காணிப் பிரச்சினை – தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் HEO அமைப்பு
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மக்களின் காணிப் பிரச்சினைகளை முறையாக ஆவணப்படுத்தி, தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் பணிகளை Human Elevation Organization (HEO) தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இதன் கீழ், பயிற்றப்பட்ட HEO தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் தனித்தனியாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேசத்தில் புளியங்குளம் விவசாய காணியை மீட்கும் நோக்கில் ஆவணப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று குச்சவெளி, தென்னை மரவாடி, புல்மோட்டை, முத்துநகர் போன்ற பகுதிகளைச் […]




