இலங்கை

நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் – நீதி அமைச்சர்

  • July 12, 2026
  • 0 Comments

எதிர்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை  சிறந்த முறையில் அரசாங்கமாக எதிர்கொள்வோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு மற்றும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் சிறந்த […]

இலங்கை

செம்மணியை பார்வையிட தயாராகும் நீதியமைச்சர் – நகர்த்தல் பத்திரம் தாக்கல்

  • June 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு கள விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டதரணி வி.எஸ். நிரஞ்சன், மேற்படி நகர்த்தல் பத்திரம் தொடர்பில் இன்று நீதிமன்ற விசாரணை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என்றார். இந்த அமைச்சர் குழுவோடு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (OMP) விசேட […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் புதிய சட்டம்: நீதி அமைச்சு கூறுவது என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு நகல் தொடர்பில் மக்களின் கருத்துகளை பெற்ற பின்னரே சட்டமூலம் இறுதிப்படுத்தப்படும்.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டவரைவு நீதியமைச்சின் இணையத்தில் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி சட்டவரைவு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. தனிநபர்களும், அமைப்புகளும் எதிர்வரும் பெப்ரவரி 28 […]