தீவிரமடையும் டெங்கு தொற்று : மாணவர்களுக்கு விசேட உடை அணிய அறிவுறுத்து
டெங்கு நுளம்புகள் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நுளம்புகள் கடிக்காத வண்ணம் பாடசாலை சீருடையுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கடிதம் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவும் அபாயத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், […]




