கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தை இன்று (21) வந்தடைந்தது. இலங்கைக் கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய இந்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த டைவிங் ஆதரவு கப்பல் வகையைச் சார்ந்த இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சைலேஷ் குமார் தியாகி (Sailesh Kumar Tyagi) செயற்படுகின்றார். குறித்த போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கைக் கடற்படையுடன் இணைந்து கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் இரு […]




