ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் தீவிபத்தை ஏற்படுத்தும் மெழுகுவர்த்திகளுக்கு தடை!

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தை தொடர்ந்து அனைத்து ஸ்பார்க்லர்  மெழுகுவர்த்திகளும் (sparkler candles) தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரான்ஸ்-மொன்டானா மேயர் நிக்கோலஸ் ஃபெராட் ( Nicolas Feraud) மேற்படி தகவலை வெளியிட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 2020 – 2025 ஆம் ஆண்டுக்கு இடையில் மதுபான விடுதிகளில் தீவிபத்து தொடர்பில் ஆய்வு செய்யப்படவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இனி ஒவ்வொரு வருடமும் தீவிபத்து ஏற்படுமா என்பது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்