பொழுதுபோக்கு

ஷாருக்கானை “வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்று கூறிய அதிகாரிகள்…

ஷாருக்கான் நேற்று தனது 60ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். ஷாருக்கானை பொறுத்தவரை ஒவ்வொரு பிறந்தநாளிலும் தன்னுடைய மன்னத் வீட்டுக்கு வெளியே வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.

ஆனால் இந்த முறை ஷாருக்கான் வீட்டை விட்டு வெளியில் வரவும் இல்லை, ரசிகர்களை சந்திக்கவும் இல்லை.

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில்,

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டேன். இதனால் எனக்காக வெளியில் காத்திருக்கும் உங்களை என்னால் சந்திக்க முடியவில்லை. இதற்காக உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கூட்ட நெரிசல் பிரச்சினையை தவிர்ப்பதற்காகவும், உங்கள் அனைவரின் பாதுகாப்பு நலன் கருதியும் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புரிதலுக்கும் என் மீதான உங்கள் நம்பிக்கைக்கும் நன்றி

நீங்கள் என்னை பார்க்க முடியாமல் தவிப்பதை விட, உங்களை பார்க்க முடியாமல் போனது எனக்கு அதிக வருத்தம். உங்களை பார்த்து அன்பை பகிர்ந்துகொள்ள ஆவலாக இருந்தேன். லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

  

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்