ஒப்பந்தத்தில் பின்னடைவு : சவுதி அரேபியாவில் இராணுவ விமானங்களை குவிக்கும் அமெரிக்கா!
அமெரிக்கா – ஈரான் இடையில் அணுசக்தி செறிவூட்டல் தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தனது இராணுவ பிரசன்னங்களை அதிகரித்து வருகின்றது.
இது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் (Prince Sultan Airbase ) விமானப்படை தளத்தில் அமெரிக்கா இராணுவ விமானங்களை குவித்து வருகிறது.
பிப்ரவரி 17 அன்று 27 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை பிப்ரவரி 21 அன்று 43 ஆக உயர்ந்தது, பின்னர் பிப்ரவரி 25 ஆம் திகதிக்குள் 38 ஆக சற்று குறைந்துள்ளது.
KC-135 ஸ்ட்ராடோடேங்கர்கள் (KC-135 Stratotankers) மற்றும் E-3 சென்ட்ரி AWACS ( E-3 Sentry AWACS ) விமானங்கள் உள்ளிட்ட பல சக்திவாய்ந்த விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளமையானது இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அடிகோடிட்டு காட்டுகிறது.
தெஹ்ரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு தனது வான்வெளி அல்லது பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா முன்னர் ஈரானுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





