இலங்கை: 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை இடம்பெற்றது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து 45 மேலதிக வாக்குகளால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் நாளை புதன்கிழமை (22) முதல் 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளதுடன், வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 13ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடுத்த வருடத்திற்கான பாதீடு முன்வைக்கப்பட்டிருந்தது.
(Visited 10 times, 1 visits today)